வேகமாக உடல் எடை குறைய இவை உங்களுக்கு உதவும்: ஒரே வாரத்தில் வித்தியாசம் தெரியும்

Weight Loss Tips: இந்த அவசர காலத்தில், பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் பெரிய அளவில் சிரமப்படுகின்றனர். அவர்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளையும் செய்கிறார்கள். எனினும், பெரும்பாலும் இவற்றால் எந்த பலனும் கிடைப்பதில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் உடல் எடை அதிகரிப்பது அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமனைக் குறைக்க பலர் பல வழிகளில் போராடினாலும், அதை வெற்றிகரமாக செய்ய முடிவதில்லை. 

1 /7

எடை குறைப்பு: உடல் எடையை குறைக்க, ஒரு நல்ல வாழ்க்கை முறை மற்றும் சிறந்த உணவு முறை மிகவும் முக்கியமாகும். உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில பயிற்சிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /7

நடைப்பயிற்சி: உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் நடக்கத் தொடங்குங்கள். தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

3 /7

ஓடுவது: வேகமாக உடல் எடையை குறைக்க ஓடுவது ஒரு பயனுள்ள பயிற்சியாகும். எனவே, தினமும் ஓடுவதன் மூலம், உங்கள் எடையை எளிதாகக் குறைக்க முடியும். 

4 /7

சைக்கிள் ஓட்டுதல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. ஆகையால் தினமும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். இது தவிர தொடைப்பகுதியில் அதிக சதை இருப்பவர்களுக்கும் இந்த பயிற்சி தேவையற்ற சதையை குறைக்க உதவியாக இருக்கும். 

5 /7

நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். தினமும் நீச்சலடிப்பதை ஒரு உடற்பயிற்சியாக செய்து வந்தால், உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இதனால் உடல் முழுவதும் உள்ள ரத்த அணுக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.

6 /7

ஸ்கிப்பிங்: ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம். ஸ்கிப்பிங் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சி. இது இதய செயல்பாடுகளை சீராக்க உதவுகிறது. இதயத்தை வலிமையாக்குவதைத் தவிர, ஸ்கிப்பிங் செய்வது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.