மேஷம் முதல் மீனம் வரை... ஜூலை மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்..!!

ஜூலை மாதம் மூன்றாவது வாரம், பல கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஜூலை மாதம் 16ஆம் தேதி, சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூலை மாதம் 19 ஆம் தேதி, புதன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.

ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில், சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சியை தவிர, கும்ப ராசியில் குரு பகவானுடன் செவ்வாய் இணைந்திருக்கிறார். மேலும் கன்னி ராசியில் கேதுவும், மீன ராசியில் ராகுவும் உள்ளனர்.இதனால், ராசிகளுக்கு ஏற்படும் பலமன்களை அறிந்து கொள்ளலாம்.

1 /14

ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில், சூரியன் பெயர்ச்சி காரணமாக, கடக ராசியில் புத ஆதித்ய யோகம் மற்றும் சுக்கிர ஆதித்ய யோகம் உருவாகிறது. அதோடு செவ்வாய் பெயர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால், செவ்வாய் குருபகவான் இணைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம் மூன்றாவது வாரத்திற்கான ராசி பலனை அறிந்து கொள்ளலாம்.

2 /14

மேஷ ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம் மன திருப்தியை கொடுக்கும் வாரமாக இருக்கும். நீங்கள் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வதால், உங்கள் அறிவு திறன் வளர்வதோடு, மற்றவர்களுக்கும் அதனால் பயன் ஏற்படும். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

3 /14

ரிஷப ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம் மன தெளிவை கொடுக்கும் வாரமாக இருக்கும். வாழ்க்கை பாதையில் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நிதானமாக முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் கழிக்க வாய்ப்பு கிடைக்கும்.

4 /14

மிதுன ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும், கடின உழைப்பினால் குடித்த நேரத்தில் அனைத்தையும் நிறைவேற்றி உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். மேலதிகாரியின் பாராட்டும் கிடைக்கும்.

5 /14

கடக ராசியினருக்கு ஜூலை மாதம் மூன்றாவது வாரம் மன மகிழ்ச்சி கொடுக்கும் வாரமாக இருக்கும். உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீண்ட காலம் நிலுவையில் இருந்து வந்த வேலைகள் நிறைவேறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

6 /14

சிம்ம ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம் வெற்றியை கொடுக்கும் வாரமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள், முயற்சியில் வெற்றி அடையலாம். ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

7 /14

கன்னி ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம் புதிய சிந்தனைகளை கொடுக்கும் வாரமாக இருக்கும். இதனால் சவால்களை சமாளிக்கும் ஆற்றல் வலுப்பெறும். நல்லது எது தீயது எது என்று மதிப்பீடு செய்து, தீயவற்றிலிருந்து விலகி இருக்க வாய்ப்பு கிடைக்கும். உறவுகள் வலுவாக இருக்கும்.

8 /14

துலாம் ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம், மன அமைதியை கொடுக்கும் வாரமாக இருக்கும். பிரச்சனைகள் தீர்ந்து மன அமைதியை பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். எனினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

9 /14

தனுசு ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம், உடல் ரீதியாக சமத்தை கொடுக்கும் வாரமாக இருக்கும். எனவே உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். பொறுமையுடன் விஷயங்களை கையாண்டால் எதிலும் வெற்றி பெறலாம். தியானம் யோகா மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது நல்லது.  

10 /14

விருச்சிக ராசியினருக்கு, ஜூலை மூன்றாவது வாரம் சவால்கள் நிறைந்த பாரமாக இருக்கும். எனினும் அறிவுத்திறனால், அனைத்தையும் சமாளித்து வெற்றி கொடி காட்டுவீர்கள். உங்கள் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் மற்றவர்களும் பயனடைவார்கள்.

11 /14

மகர ராசியினருக்கு ஜூலை மூன்றாவது வாரம், சுமாரான வாரமாக இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும் என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும். எனவே செலவு செய்யும்போது கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும்.

12 /14

கும்ப ராசியினருக்கு ஜூலை மூன்றாம் வாரம் மகிழ்ச்சியை கொடுக்கும் வாரமாக இருக்கும். குடும்பத்தினுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட கால நண்பர்களை சந்திப்பதால் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும்.

13 /14

மீன ராசியினருக்கு ஜூலை மூன்றாம் வாரம் ஆக்கப்பூர்வமான வாரமாக இருக்கும். எந்தவிதமான சவாலையும் சமாளித்து உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லிய தன்மைக்கு நாங்கள் பொறுப்பு இல்லை. இந்தத் தகவல் ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.