மூளை செல்களில் திடீர் இழப்பு அல்லது தமனியில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக மூளை பக்கவாதம் ஏற்படுகிறது.
அதிக அளவில் மது அருந்துவதால் தமனிகள் தடிமனாக மாறி மூளை பக்கவாதம் ஏற்படும்.
உடற்பயிற்சியின்மை மூளை பக்கவாதத்திற்கு மற்றொரு முக்கியமான காரணியாக இருக்கும் என்பதால் தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, போதுமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடாமல் இருப்பதாலும் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது.
புகைபிடிப்பதால் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.