சிறந்த காதல் ஜோடிகளாக இருக்க வேண்டுமா? இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்க!

தற்போது உறவுகளில் விரிசல்கள் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பல உள்ளன. இருப்பினும் ஒரு உறவில் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம் என்றாலும் அதனை வராமல் தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /7

ஒருவர் மீது காதல் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒருவேளை ஒருவர் மீது காதல் வந்துவிட்டால் அதனை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். காதலை பலரும் கொண்டாடினாலும், சிலர் அதனை வெறுக்கிறார்கள்.   

2 /7

உங்கள் காதலி மற்றும் மனைவியின் ஆதரவை நீங்கள் பெற விரும்பினால், முதலில் நல்ல நபர்களாக பழகுங்கள். இதன் மூலம் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை பேசி சமாளிக்க முடியும்.   

3 /7

ஒரு நல்ல ஜோடியின் அழகு எப்படிபட்ட சூழ்நிலைகளிலும் ஆதவராக இருப்பது ஆகும். பண தேவை முதல், வேலை இல்லாமல் இருக்கும் காலம் வரை அல்லது வீட்டில் எப்படிப்பட்ட பிரச்சனை ஆக இருந்தாலும் சரி ஒன்றாகவே இருக்க வேண்டும்..  

4 /7

மனிதர்கள் அனைவரும் தப்பு செய்பவர்கள் தான். எனவே உங்கள் மனைவி அல்லது காதலியிடம் உள்ள குறைகளை மனதில் கொள்ளாமல், அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். இது உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும்.   

5 /7

ஒரு உறவில் ஒருவருக்கொருவர் கொண்டும் சுதந்திரம் தான் உறவை மேலும் வலுப்பெற செய்யும். உங்கள் விருப்பங்களையோ அல்லது அவர்களது விருப்பங்களையோ திணிக்காமல் இருப்பதும் ஒரு சிறந்த ஜோடியின் அடையாளம்.  

6 /7

காதல் இருக்கும் இடத்தில் சண்டையும் வரும். எனவே சண்டையில் அவசரப்பட்டு வாய்விட வேண்டாம். சண்டையைத் தீர்க்க என்ன வழி என்று கண்டுபிடியுங்கள். எதையும் புத்திசாலித்தனமாக தீர்ப்பது முக்கியம்.   

7 /7

காதலிக்கும் போதும் சரி, திருமணம் ஆனாலும் சரி உறவில் நேர்மை இருப்பது முக்கியம். உங்கள் துணையைப் பற்றி உங்களுக்கு எதாவது பிடிக்கவில்லை என்றால் அதனை நேரடியாக சொல்லிவிடுவது நல்லது.