இன்னும் 37 நாள் தான்! சனியின் வக்ரகதியால் அருமையான எதிர்காலம்! 3 ராசிகளுக்கு அருமை!

Shani Retrograde Good Fortune For 3 Zodiacs: நவகிரகங்களின் சஞ்சார மாற்றத்தில் சனீஸ்வரரின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது  ஜூன் 29 அன்று எதிர்திசையில் சஞ்சரிக்கப்போகும் சனீஸ்வரர் 135 நாட்களுக்கு பிறகு தான் வழக்கமான பாதைக்கு திரும்புவார்.  

எதிர்மறையாக சுற்றும் சனீஸ்வரரால் 9 ராசிகளுக்கு கஷ்டம் என்றாலும் மூன்று ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்த மூன்று ராசிகள் எவை? அதில் உங்களுடையதும் உள்ளதா என தெரிந்துக் கொள்ளுங்கள்...

1 /8

ஜூன் 29ஆம் தேதி வக்கிர நிலைக்கு அதவாது கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் பயணத்தைத் தொடங்க உள்ள சனி பகவான், நவம்பர் மாதம் வரை வக்கிர நிலையிலேயே பயணிப்பார்

2 /8

கிரகங்கள் அனைத்தும் தங்கள் வேகத்தின் அடிப்படையில் இயங்குவதால், அவற்றின் சஞ்சார காலமும், பெயர்ச்சிக்கான காலமும் ஒன்றுக்கு மற்றொன்று மாறுபடும். மெதுவாக இயங்கும் தன்மை கொண்டவர் சனி பகவான் என்பதால், சனிப் பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடைபெறும்

3 /8

2024ம் ஆண்டில் சனி பெயர்ச்சி ஆக போவதில்லை. மார்ச் மாதத்தில் உதயம்  ஆன சனி, அடுத்த மாதம் அதாவது ஜூன் 29ஆம் தேதி வக்கிர நிலையில் இயங்குவார். இது 3 ராசிகளுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்

4 /8

கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் எதிர்திசை சஞ்சாரம் சாதகமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், தூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் இருந்தால், அவை முடிவுக்கு வரும். வாரக்கடன் தொடர்பான கவலைகள் நீங்கி, பணத்தை திரும்பப் பெறலாம்  

5 /8

சனியின் பிற்போக்கு இயக்கத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் தான். பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நேரம் இது. குடும்ப உறவுகளில் இணக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவரையொருவர் நன்கு புரிந்துக் கொள்ளும் வாய்ப்புகள் தானாகவே ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாலை வாய்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் லாபம் கிடைக்கும்.

6 /8

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு இயக்கம் நன்மை தரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு என பணம் நன்றாக புரளும். ரிஷப ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  

7 /8

135 நாட்களுக்கு சனீஸ்வரர் வக்ர கதியில் இருப்பார் என்பதால், இந்த மூன்று ராசிகளுக்கும் நல்ல காலம் தான்...  

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது