சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த காய்கறிகளை கண்டிப்பா சாப்பிடுங்க

Best Vegetables For Diabetes: நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த சில காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே அவை என்ன காய்கறிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

Best Vegetables For Diabetes: தவறான உணவுப் பழக்கவழக்கம், தவறான வாழ்க்கை முறை காரணத்தால் உடலில் சர்க்கரை நோய் மக்களிடையே சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், சில காய்கறிகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும், அவற்றைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

1 /6

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, சுரைக்காய் உட்கொள்ளலாம். இதில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளதால், இவற்றை உட்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.  

2 /6

நீரிழிவு நோயாளிகளுக்கு கேரட் நன்மை தரும். இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு என்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும்.  

3 /6

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் கூறப்படுள்ளது.  

4 /6

பாகற்காய் ருசியில் கசப்பாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம். இது இரத்தச் சர்க்கரைக் குறைக்க உதவும்.  

5 /6

நீரிழிவு நோயாளிகள் கீரையைச் சேர்த்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளதால், கீரை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். இதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

6 /6

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.