நம்மில் பலருக்கு வெங்காயம் மிகவும் பிடிக்கும். அனைவரும் அதை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோலை குப்பைகளாக வீசிவிடுகிறார்கள்.
வெங்காயத் தோலைப் பயன்படுத்துவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. ஆம், வெங்காயத் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்துடன் நமது சருமத்தின் அழகையும் அதிகரிக்க உதவுகின்றன. வெங்காயத் தோலை எந்த வகையில் பயன்படுத்தினால் ஆச்சரியப்படும் நன்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இங்கே காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெங்காய தோல்களைப் பயன்படுத்தலாம். பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வெங்காய தோல்களில் காணப்படுகின்றன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வெங்காய தோல்களின் சாறு உட்கொள்ளப்படுகிறது.
ஒரு ஆய்வின்படி, வெங்காயத் தோல்களில் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்செடின் மற்றும் பினோலிக் ஆகியவை உடலில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெங்காயத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. குளிர், சளி காரணமாக சிலருக்கு தொண்டையில் வலி இருக்கும். வெங்காயத் தோல்களை தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த நீரைக்கொண்டு கொப்பளித்தால் நன்மை கிடைக்கும்.
முடி உதிர்தல் பலருக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. வெங்காய தோல்களின் சாறு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. உங்கள் தலைமுடி வறண்டு, வளரவில்லை என்றால் வெங்காயத் தோலை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு, வெங்காயத் தோலை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஷாம்பு தடவிய பிறகு இந்த தண்ணீரால் முடியை கழுவவும். இது பொடுகு பிரச்சனையையும் நீக்குகிறது.
வெங்காயத் தோலை பயன்படுத்துவதன் மூலம் பிரகாசமான தோலைப் பெறலாம். இதற்கு, வெங்காய சாற்றை மஞ்சளில் கலந்து முகத்தில் தடவவும். இதைச் செய்வதன் மூலம், முகத்தின் புள்ளிகள் அகற்றப்படும். வெங்காய தோல்களின் சாறு இறந்த சருமத்தை (Dead skin) அகற்ற உதவியாக கருதப்படுகிறது. இது சருமத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் சருமத்தை பளபளப்பாகவும் மாற்றும்.