மாமன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ்க்கு 50 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கிய உதயநிதி!
மாமன்னன் படம் கடந்த வியாழக்கிழமை ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியானது.
எதிர்பார்த்ததை போலவே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வழக்கம் போல மாரி செல்வராஜ் தனது அழுத்தமான அரசியலை சொல்லி இருந்தார்.
வடிவேலு, பகத் பாசில் போட்டி போட்டு தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தனர். ரசிகர்களுக்கும் படம் பிடித்து போய் விட்டது.
சமீபத்தில் மாமன்னன் படக்குழு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியது. கீர்த்தி சுரேஷ், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு 50 லட்சம் மதிப்புள்ள புதிய மினி கூப்பர் காரை பரிசாக வழங்கி உள்ளார்.