மெய்யழகன் படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுத பிரபல நடிகர்!! யார் தெரியுமா?

Actor Says He Cried Watching Meiyazhagan Movie : சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம், மெய்யழகன். இந்த படத்தை பாராட்டி ஒரு பிரபல நடிகர் பதிவிட்டிருக்கிறார். 

Actor Says He Cried Watching Meiyazhagan Movie : தியேட்டர்களில் வெளியாகும் ஒரு சில படங்கள், அப்போது நல்ல விமர்சனங்களை பெறவில்லை என்றாலும், ஓடிடியில் வெளியான பிறகு நல்ல வரவேற்பினை பெறும். அப்படி, மக்கள் மத்தியில் ஓடிடி ரிலீஸிற்கு பின்னர் நல்ல வரவேற்பை பெற்ற படம், மெய்யழகன். கார்த்தி-அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர், இது குறித்து தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 

1 /7

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம், மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தியும் அரவிந்த் சாமியும் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். 

2 /7

96 படத்தை எடுத்து புகழ் பெற்ற பிரேம் குமார், இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், கார்த்தி-அரவிந்த் சாமி இடையே ஒரு இரவில் நடக்கும் உரையாடல்தான் மொத்த படமாக இருந்தது. 

3 /7

பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அனைவருக்கும் பிடித்தார் போல இருந்த மெய்யழகன் படத்தை, ஒரு சில விமர்சகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், படம் சுமாராக இருப்பதாக தியேட்டர்களில் வெளியான போது மக்களின் வரவேற்பினை இப்படம் சரியாக பெறவில்லை. 

4 /7

மெய்யழகன் படம், கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் வெளியான போது சரியாக ஓடாத இந்த படம், ஓடிடியில் வெளியான பிறகு நல்ல வரவேற்பினை பெற்றது. இதையடுத்து, பலர் இது குறித்து பாராட்டி பதிவிட ஆரம்பித்தனர். 

5 /7

மெய்யழகன் படத்தில் இடம் பிடித்திருந்த பல காட்சிகள், மக்களுக்கு பிடித்ததாக இருந்தது. குறிப்பாக, கார்த்தி-அரவிந்த் சாமி “கோடை கால காற்றே” பாடல் பாடும் காட்சியும், “இந்த மான் எந்தன் சொந்த மான்” பாடல் பாடிய காட்சியும் வரவேற்பினை பெற்றது. 

6 /7

இந்த படம் குறித்து, பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் படத்தை பாராட்டி பேசியிருக்கிறார். இந்த படத்தை பார்த்து தான் பயங்கரமாக அழுததாகவும், அரவிந்த் சாமி, கார்த்தி ஆகியோர் நன்றாக நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இயக்குநரையும் வெகுவாக பாராட்டியிருந்தார். 

7 /7

அனுபம் கெர் இந்த படத்தை பாராட்டியதை அடுத்து, பிற மாநிலங்களில் இருப்பவர்களும் இந்த படத்தை தற்போது பார்த்து வருகின்றனர்.