Soya Chunks In Diet: தாவர அடிப்படையிலான புரதத்தின் அற்புதமான மூலமான சோயா சங்க்ஸ், பிற வகையிலான புரதங்களை விட அதிக நன்மை பயக்கும். நமக்கு ஏற்படும் புரதச் சத்து குறைபாட்டை நீக்க, சோயா சங்கஸ் என்னென்ன நன்மைகளைத் தரும்?
சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் சோயா சங்க்ஸ், விதவிதமாய் ருசியாக சமைத்து உண்ண சிறந்த தேர்வாக இருக்கிறது. சுவைக்கு மட்டுமில்லை, ஆரோக்கியத்திற்கும் சோயாவை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சோயா உண்பதால் ஏற்படும் அரோக்கிய நன்மைகள் என்ன? தெரிந்துக் கொள்வோம்
ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்களே அடிப்படை. அந்த வகையில் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சூப்பர்ஃபுட்களில் முக்கியமான ஒன்று சோயாபீன்.
உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு இருந்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக உடலை தொற்றுநோய்கள் எளிதாக பாதிக்கின்றன. அந்தவகையில் சோயாபீன் ஒரு அருமையான உணவு ஆகும்
உங்கள் உணவில் சோயா சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் வேறு சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உயர் புரத உணவு கல்லீரல் பாதிப்பைத் தடுக்க உதவும் சோயாவில் உயர் புரத உணவு இருக்கிறது. சைவ உணவு உண்பவர்களுக்கு சோயாவைப் போல புரதச்சத்து கொண்ட உணவு இல்லை என்று சொல்லலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது சோயா உருண்டைகளில் அதிக அளவிலான புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் அவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.
எடை இழப்பு நார்ச்சத்து அதிகம் உள்ள சோயா, சாப்பிட்டு நீண்ட நேரம் ஆனாலும் பசி உணர்வை எடுக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பதால் அடிக்கடி சாப்பிடும் ஆர்வத்தைக் குறைக்கிறது. இதனால் உடல் எடை விரைவில் குறையும்
செரிமானத்தை மேம்படுத்துகிறது சோயா, நார்ச்சத்து நிறைந்த அருமையான உணவாகும். இது உடலின் செரிமானத்திற்கு அவசியமானது. சோயா துண்டுகளை வழக்கமாக உட்கொள்வது செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சோயா உருண்டைகள் நன்மை பயக்கும். சோயாவில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை