Tamil Nadu Weather Latest News: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது வலுப்பெற்றிருக்கிறது. பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Chennai Heavy Rain Update: கனமழைக் காரணமாக சில மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரங்களை அறிந்துக்கொள்ளுகள்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தற்போது மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதலில் ஆறு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது வலுப்பெற்றிருக்கிறது. எனவே சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேநேரத்தில் வங்கக்கடலில் நிலவும், 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி' புயலாக மாற வாய்ப்பில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி என இருநாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.