Indian Cricket Team: ஒருநாள் அரங்கில் ஒரு ஆண்டில் மொத்தம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் சுப்மான் கில் ஏழாவதாக தற்போது இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக் எதிரான இரண்டாவது போட்டியின் போது இந்தாண்டின் ஐந்தாவது ஓடிஐ சதத்தை கில் பதிவு செய்தார். இந்நிலையில், ஒரு ஆண்டில் மொத்தம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த 7 இந்திய வீரர்களை இங்கு காண்போம்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1996, 1998 ஆம் ஆண்டுகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஓடிஐ சதங்களை அடித்தார். ஓடிஐயில் அவரின் மொத்த சதம் 49.
முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி 2000ஆம் ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் சதங்களை அடித்தார். அவர் மொத்தம் 22 ஓடிஐ சதங்களை அடித்துள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 1999ஆம் ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஓடிஐ சதங்களை அடித்தார். டிராவிட் மொத்தம் 12 ஓடிஐ சதங்களை அடித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2012, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய 4 ஆண்டுகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஓடிஐ சதங்களை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, கோஹ்லி 47 ஓடிஐ சதங்களை அடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, ரோஹித் சர்மா 30 ஒடிஐ சதங்களை அடித்துள்ளார்.
ஷிகர் தவான் 2013ஆம் ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஓடிஐ சதங்களை அடித்துள்ளார். தவான் 167 போட்டிகளில் 17 ஓடிஐ சதங்களை அடித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ஒரு ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த 7ஆவது இந்திய வீரர் ஆனார். இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கில் இந்த ஆண்டின் 5வது சதத்தை பதிவு செய்தார்.