டாடா பஞ்ச் கார் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 4 ம் தேதியன்று அன்று வெளியிடப்படுகிறது.
டாடா பஞ்ச் சொகுசு காரின், வடிவமைப்பு, தொழில்நுட்பம், இயக்கவியல் மற்றும் பல அம்சங்களை தெரிந்துக் கொள்வோம்...
எச்பிஎக்ஸ் கான்செப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எஸ்யூவிக்கு ‘பஞ்ச்’ என்று நிறுவனம் பெயர் சூட்டியது. இந்த பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட் 23 ஆம் தேதி PUNCH வெளியிடுவதை உறுதி செய்தது,
அடுத்த தலைமுறை பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டாடா ‘பஞ்ச்’ சூப்பர் எஸ்யூவி ஆகும்
டாடா பஞ்ச் பிஸியான தெருக்களில் புத்திசாலித்தனமாக ஊடுருவிச் செல்லும். வளைந்த, கரடுமுரடான கிராமப்புற பாதைகளிலும் ஓட்ட சூப்பர் SUV இது.
டாடா பஞ்ச் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எஸ்யூவியாக இந்திய சந்தையை மாற்றியமைக்கும். அதன் தசை மேற்பரப்பு மற்றும் சூப்பரான லுக் எஸ்யூவிக்கான சரியான வரையறையை உருவாக்குகிறது.
இலகுரக, மட்டு மற்றும் நெகிழ்வான குணாதிசயங்களுடன், ஆல்ஃபா வடியமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள நவீன வாகனம் இது., PUNCH இந்த பண்டிகை காலங்களில் சந்தையில் நுழைந்து, தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்க தயாராக இருப்பதாக டாடா கூறுகிறது.