ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர், நடிகைகளாக சில நட்சத்திரங்கள் ஜொலித்து கொண்டிருக்கின்றனர். [Pic Credits: Facebook]
மணிரத்தினம் இயக்கத்தில், சூர்யா, சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோரது நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான படம் 'ஆயுத எழுத்து'. இந்த படத்தில் தற்போது திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் 'தாம் தூம்'. இந்த படத்தில் கதாநாயிகையாக நடித்திருந்த கங்கனா ரனாவத்தின் உறவுக்கார பெண்ணாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி.
மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'கன்னத்தில் முத்தமிட்டாள்'. இப்படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பாலச்சந்தர் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான படம் 'பார்த்தாலே பரவசம்'. இந்த படத்தில் சமுத்திரக்கனி ஒரு நோயாளியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ராஜிவ் மேனன் இயக்கத்தில் அரவிந் சாமி மற்றும் பிரபு தேவா நடிப்பில் வெளியான படம் 'மின்சார கனவு'. இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
2003ம் ஆண்டு வெளியான 'வின்னர்' படத்தில் சூரி சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.
2002ம் ஆண்டு வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தில் சந்தானம் சிறிய கதாபாத்திரத்திலும்,
விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் நடிகர் ஷியாம் விஜயின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'அருவி' படம் மூலம் பிரபலமாக அறியப்பட்ட அதிதி பாலன், 2015ம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார்.
2011ம் ஆண்டு வெளியான 'ஆடுகளம்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த டாப்ஸியை ஒருதலையாக காதலிப்பவராக 'அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமான தினேஷ் நடித்திருந்தார்.