பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்..!

Pongal Gift | பொங்கல் பரிசு இன்னும் வாங்காதவர்கள் ஜனவரி 25 ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு (Pongal Gift) இன்னும் வாங்காதவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட்நியூஸ் வெளியிட்டுள்ளது.

 

1 /6

பொங்கல் பரிசுத் தொகுப்பு (Pongal Gift) இதுவரை வாங்காதவர்கள் ஜனவரி 25 ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவரை 85 விழுக்காடு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடந்து முடிந்திருக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 /6

சுமார் ஒரு கோடியே 87 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் முடிந்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு முழுக்கரும்பு, சர்க்கரை மற்றும் பச்சரிசி இடம்பெற்றிருக்கும். இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 /6

தமிழ்நாட்டில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. ஜனவரி 3 ஆம் தேதி முதல் இதற்கான டோக்கன் விநியோகம் நடந்தது. இந்த டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியும்.

4 /6

வாங்காதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையை அணுகி பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனை பெற்று, பரிசுத் தொகுப்பையும் வாங்கிக் கொள்ளலாம். இப்போது பொங்கல் பண்டிகை முடிந்துவிட்டதால் பொங்கல் பரிசு வாங்க முடியாது என நினைக்க வேண்டாம்.

5 /6

இதுவரை வாங்க வில்லை என்றாலும் ஜனவரி 25 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கடைக்கு செல்லும்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

6 /6

வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களுக்காக தமிழ்நாடு அரசு இந்த குட்நியூஸை வெளியிட்டுள்ளது. அதாவது இன்றிலிருந்து 6 நாட்களுக்குள் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது.