ஓடிடியில் இன்று வெளியான விடுதலை 2!! எந்த தளம் தெரியுமா?

Viduthalai Part 2 Released On OTT : விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த விடுதலை பாகம் 2 திரைப்படம் இன்று பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அது எந்த தளம் தெரியுமா?

Viduthalai Part 2 Released On OTT : வெற்றிமாறன் இயக்கத்தில், சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் விடுதலை பாகம் 2. முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம், பலருக்கும் ஒத்து வராத அரசியலை பேசியதால் அது பெரிய வரவேற்பினை பெறவில்லை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இது, பிரபல ஓடிடி தளம் ஒன்றில் ஜனவரி 19ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. 

1 /7

விடுதலை பாகம் 2 படம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தை, சூரியை சுற்றி கதை நகர, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து கதை எழுதப்பட்டிருந்தது. 

2 /7

விடுதலை பாகம் 2 படத்தில், விஜய் சேதுபதியின் ஃப்ளேஷ் பேக் காட்சிகள் காட்டப்படுகிறது. இதில், மஞ்சு வாரியர் அவருக்கு மனைவியாக வந்திருக்கிறார். 

3 /7

விடுதலை பாகம் 2, வழக்கம் போல வெற்றிமாறனின் ஸ்டைலில் ஜனரஞ்சகமாக இருந்தது. கத்தி, ரத்தம், சண்டை ஆகியவற்றிற்கு இப்படத்தில் பஞ்சமே இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. 

4 /7

இந்த படம், பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம், இதில் பேசப்பட்டிருந்த அரசியல் எனக்கூறப்படுகிறது. 

5 /7

விடுதலை 2 படம், 1 மாதமாக திரையரங்குகளில் ஓடிய நிலையில், மொத்தமாக சுமார் 55 கோடியை கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. 

6 /7

விடுதலை 1 படமும், ஜீ 5 தளத்தில் உள்ளது. இதனை இலவசமாகவே காணலாம். 

7 /7

விடுதலை 2 படம், தற்போது பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகி இருக்கிறது. நள்ளிரவு 12 மணி முதல் இந்த தளத்தில் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.