Pongal 2024 Movies: ஒரே நாளில் வெளியாகும் 4 முக்கிய தமிழ் படங்கள்! எதை முதலில் பார்க்க போறீங்க?

Tamil Movies Releasing On January 12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?

1 /7

ஜனவரி 12ஆம் தேதியன்று, பொங்கல் பண்டிகையை ஒட்டி முக்கிய தமிழ் படங்கள் வெளியாகின்றன. இந்த படங்களில் எதை முதலில் திரையரங்கிற்கு சென்று பார்ப்பது? 

2 /7

தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள திரைப்படம், ஹனுமன் இந்த படத்தை பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். ஹீரோவாக தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலக்‌ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், நாளை வெளியாக உள்ளது. 

3 /7

மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம், குண்டூர் காரம். இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். இப்படமும் நாளை வெளியாகிறது. 

4 /7

4-5 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாக வேண்டிய படம், அயலான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவி குமார், இந்த படத்தை எடுத்திருக்கிறார். விஎஃப்எக்ஸ் பணிகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஜனவரி 12 ரிலீஸாகும் இந்த படம் குழந்தைகளுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /7

தனுஷ் நடிப்பில், அருண் மாத்தேஸ்வரன் இயக்கியுள்ள படம், கேப்டன் மில்லர். இந்த படமும் பொங்கலையொட்டி நாளை வெளியாகிறது. இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து அதிதி பாலன், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம், ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /7

அருண் விஜய் நடித்துள்ள படம் மிஷன் சேப்டர் 1. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். நாளை வெளியாகும் இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படமும் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. 

7 /7

கொலை-த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள படம், மெர்ரி கிறிஸ்துமஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்திருக்கிறார். இப்படம், விஜய் சேதுபதிக்கு புதிதாக பாலிவுட் மேடை அமைத்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.