வலுவான எலும்புகள் வேண்டுமா? இந்த பானங்களை உட்கொண்டால் போதும்

Bone Health:  நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில பானங்கள் நம் எலும்புகளை உருக்கி, அவற்றை பலவீனப்படுத்துகின்றன. இந்த பானங்கள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு எலும்பின் வலிமையையும் குறைக்கும்.

அதிக அளவு ஆல்கஹால், காஃபின், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட சோடாக்கள் ஆகிய பானங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பானங்களைத் தவிர்க்க, சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். இதனால் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். எலும்புகளை வலுவாக்க உங்கள் அன்றாட வாழ்வில் பின்வரும் பானங்களை சேர்த்துக்கொள்ளலாம். 

1 /8

ஆல்கஹால், காஃபின், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட சோடாக்கள் போன்றவற்றில் உள்ள சில கூறுகளை அதிகமாக உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது எலும்புகளின் ஆரோக்கியமற்ற நிலைக்கு வழிவகுக்கும். 

2 /8

ஆரோக்கியமான எலும்புகளை பெற கீழ்வரும் பானங்களை உட்கொள்ளலாம். 

3 /8

பால், தயிர், பனீர், தயிர் போன்றவற்றில் இயற்கையான கால்சியம் மற்றும் எலும்பின் வலிமையை ஊக்குவிக்கும் புரதச்சத்து உள்ளது.  

4 /8

கிரீன் டீயில் இரும்புச்சத்து, வைட்டமின் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

5 /8

இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை ஊக்குவிக்கிறது.

6 /8

ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.  

7 /8

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் உள்ளன, அவை எலும்புகளை வலுப்படுத்துகின்றன.

8 /8

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.