பளபளப்பான சருமம் பெற இந்த 5 உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!

பளபளப்பான சருமம் பெற நாம் சாப்பிடும் உணவு முறை மிகவும் அவசியம். ஒளிரும் சருமத்திதை பெற நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

 

1 /5

இயற்கையான உணவுகள் மற்றும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இயற்கை மற்றும் கரிம உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் நமது சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.   

2 /5

இனிப்பு உருளைக்கிழங்குகளில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. இவை சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவும் மற்றும் முகப்பருவை சரி செய்கிறது. உங்கள் சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் மாற்றுகிறது.   

3 /5

தயிரில் செரிமானத்திற்கு உதவும் பலவிதமான பாக்டீரியா உள்ளன. தயிரில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றான லாக்டிக் அமிலம் பல தோல் பராமரிப்பு பொருட்களில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. தயிரில் துத்தநாகம், வைட்டமின்கள் பி2, பி5 மற்றும் பி12 நிறைந்துள்ளது.   

4 /5

சருமத்திற்கு முக்கியமானது நீரேற்றம் ஆகும். அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட வெள்ளரிக்காய் சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த நீரேற்ற அளவையும் சரிசெய்ய ஒரு சிறந்த வழியாகும். இது தோலுக்கு மிகவும் நல்லது.  

5 /5

கடல் வாழ்விடங்களில் வாழும் சிப்பிகள், துத்தநாகம் ஆனது தாமிரம், இரும்பு மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் சிறந்த ஆதாரங்களாகும். சிப்பியில் உள்ள தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.