ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை பரிந்துரைக்கும் அதே வேளையில், அதிக தண்ணீர் குடிப்பது உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் உடலில் திரவம் வழிதல் மற்றும் சமநிலையின்மை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதிகப்படியான நீர் உடலின் உப்பு அளவைக் குறைத்து, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்கு ஹைபோநெட்ரீமியா என்று பெயர்.
அதிக தண்ணீர் குடிக்கும் போது எலக்ட்ரோலைட் அளவு குறைகிறது, மேலும் சமநிலை அசைகிறது. எலக்ட்ரோலைட் அளவு குறைவாக இருக்கும்போது தசை வலி மற்றும் பிடிப்புகள் போன்றவை ஏற்படுகிறது.
அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் பணி அதிகரித்து ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வீட்டிலோ, வேலையிலோ அல்லது பள்ளியிலோ சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும், இது மிகவும் சிரமமாக இருக்கும்.
அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வது உடலை சோர்வு அடைய ஏற்படுத்தும். அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்யும், இதனால் சில ஹார்மோன்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உடலையும், மனதையும் சோர்வடையச் செய்யும்.
பல நாடுகளில் குழாய் நீரை சுத்தப்படுத்த குளோரின் பயன்படுத்தப்படுகிறது. அதிக குளோரினேட்டட் தண்ணீரை நீண்ட காலத்திற்கு உட்கொள்வது சிறுநீர்ப்பை மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.