Banana Side Effects: வாழைப்பழம் சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
பொதுவாகவே, ஆரோக்கியத்திற்கு பழங்களை உட்கொள்வது மிகவும் அவசியம். வாழைப்பழம் முதல் ஆப்பிள் வரை அனைத்தும் இதில் அடங்கும். வாழைப்பழத்தை பெரும்பாலானோர் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
வாழைப்பழம்: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகிய சத்துக்களுடன் குளுதாதயோன், பீனாலிக்ஸ், டெல்பிடின் மற்றும் நரிங்கின் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆரோக்கியமான சிறந்த பழங்களில் ஒன்றான வாழைப்பழம், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டிருந்தாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், வாழைப்பழைத்தை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்த விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரக நோய்: நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழங்களை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தை பாதிக்கும்
இரத்த அழுத்தம்: வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இதனால்தான் ரத்த அழுத்தம் அல்லது இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் சத்து அளவிற்கு அதிகமானால், சீரற்ற இதயத் துடிப்பு, பலவீனமான தசைகள், சோர்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
நீரிழிவு: வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு மிக அதிகம். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. எனவேநீரிழிவு நோயாளிகள் வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
செரிமான பிரச்சனை: நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் செரிமானத்திற்கு சிறந்தது என்றாலும், செரிமான பிரச்சனை இருக்கும் போது அளவிற்கு அதிகமான நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
ஒவ்வாமை: சிலருக்கு வாழைப்பழம் என்றால் அலர்ஜியாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தவறுதலாக கூட வாழைப்பழத்தை உட்கொள்ளக்கூடாது. இது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.