MoUs Signed IN UAE BY PM MODI: வர்த்தக தீர்வுகளுக்காக, இந்தியா மற்றும் யுஏஇ இடையில் இரு நாடுகளின் கரன்சிகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது
இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பொருளாதார ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேம்படுத்தும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
பிரான்சில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அபுதாபிக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஹெச்.ஹெச்.ஷேக் முகமது சயீத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அபுதாபியில் ஜனாதிபதி மாளிகையான கஸ்ர்-அல்-வதனில் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது, அங்கு அவரை ஐக்கிய அரபு அமீரக அதிபர் அன்புடன் அரவணைத்து வரவேற்றார். மரியாதைக் காவலரை பிரதமர் பார்வையிட்டபோது குழந்தைகள் இந்திய மூவர்ணக் கொடியை
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் UAE மத்திய வங்கி இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஆற்றல், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாசாரம் குறித்து ஆலோசனை கலந்த இரு நாட்டு தலைவர்களும், உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
கடந்த ஆண்டு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து இந்தியா-யுஏஇ வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள சிஓபி-28க்கான ஏற்பாடுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் தலைமையில் நடந்து வருகிறது
எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது
கட்டணம் மற்றும் செய்தியிடல் அமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதில் ஒத்துழைக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது
இரு நாடுகளும் தங்கள் நாணயங்களில் வர்த்தக தீர்வைத் தொடங்க ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோதி அறிவித்தார்.