சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... அட்டகாசமான நற்பலன்கள் கைகூடும்

Shani Margi, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சனி மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஆகையால் அவரது தாக்கமும் அனைத்து ராசிகளிலும் அதிகமாக இருக்கும்.

தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனியின் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

ஜோதிடத்தில், கோள்களின் வக்ர நிலை மற்றும் வக்ர நிவர்த்தி நிலை ஆகியவை மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவற்றின் தாக்கங்கள் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.

2 /9

சனி வக்ர நிவர்த்தி: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 04 ஆம் தேதி வரை இந்த நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். 

3 /9

சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலங்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /9

ரிஷபம்: சனியின் வக்ர நிவர்த்தி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரம் போன்றவற்றில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் நன்மைகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான நேரமாக இது இருக்கும். இந்த காலகட்டத்தில் வெற்றியும் பெறலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி கிடைக்கும்.

5 /9

மிதுனம்: சனியின் வக்ர நிவர்த்தியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் பெற்றோரை கவனிப்பது நன்மை தரும். இந்த நேரத்தில், உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். தந்தை மற்றும் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். சனி வக்ர நிவர்த்தி வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக அமையும்.

6 /9

துலாம்: சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்கு சாதகமாக அமையும். இந்த காலத்தில் பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். சனி வக்ர நிவர்த்தியில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வருமானம் உயர வாய்ப்பு உண்டு. இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

7 /9

தனுசு: சனி பகவானின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும். இதனுடன், புதிய பொறுப்புகளையும் நீங்கள் பெறக்கூடும். மாணவர்களுக்கு இந்த நேரம் மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் கடின உழைப்புக்கு சாதகமான பலன்கள் தெரியும்.

8 /9

சனி பகவானை மகிழ்விக்க: உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவும் நல்ல எண்ணம் கொண்டவர்களை சனி பகவான் சோதிப்பதில்லை. மனிதர்களை பாதிக்கும் ஏழரை சனி, சனி தசை ஆகியவற்றின் தாக்கத்தில் உள்ளவர்கள் அவர் அருளை பெற, கோளறு பதிக, சனி சாலிசா ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லலாம். 

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.