ராகு-சுக்ர சேர்க்கை 2022: கடந்த மாதம் ராகு தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதே சமயம் இன்று அதாவது மே 23ம் தேதி சுக்கிரனும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைந்து கோப யோகத்தை உண்டாக்குகிறார்கள். மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு அசுபமான பலன்களை தரும். இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கவனமாகவும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் கோபம், வாக்குவாதம் போன்றவற்றை தவிர்க்கவும். அடுத்த 27 நாட்களுக்கு சுக்கிரன் மேஷ ராசியில் இருப்பார் அதுவரை இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ராகு-சுக்கிரன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு இயல்புநிலையை துரிதப்படுத்தும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நெருங்கியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். வாழ்க்கை துணை அல்லது காதல் துணையுடன் உறவு மோசமடையலாம்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராகு-சுக்கிரன் இணைவு உறவுகளிலும் பணத்திலும் பிரச்சனைகளை தரும். புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.
ராகு-சுக்கிரன் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். துணையுடன் தகராறு ஏற்படலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு-சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் கோப யோகம் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் கவனமாக இருக்கவும். சிலர் தங்கள் துணையை விட்டு விலகிச் செல்லலாம். உறவை வலுப்படுத்த நிதானத்துடன் முயற்சி செய்வது நல்லது.
ராகு-சுக்கிரன் இணைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு கோபம் அதிகரிக்கும். அவர்களால் பணிடிடத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாது. சவால்களை சந்திக்க நேரிடலாம். நெருங்கியவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பொறுமையாக இருங்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)