இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை எழுதினார் இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின்.
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தினார். 100 விக்கெட் சாதனையின் புகைப்படத் தொகுப்பு...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்
மொஹாலியில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் போது, அஸ்வின் தனது 435 வது ஸ்கால்ப்புடன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றா
கபில்தேவை முந்திய ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் தற்போது 86 டெஸ்ட் போட்டிகளில் 442 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளா
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைனை (439) பின்னுக்குத் தள்ளி எலைட் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தார் அஸ்வின்
86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஸ்வின் 100 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.அதிக அளவிலான விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் டேல் ஸ்டெயின் 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.