Budget 2021: வரி விலக்கு முதல் கல்விக் கடன் வரை, இந்தியாவின் Top 10 எதிர்பார்ப்புகள்

Union Budget 2021: மத்திய பட்ஜெட் 2021 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 1 ம் தேதி நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 

ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது சிறப்பு சலுகைகள் இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நிதியமைச்சரும் இது குறித்து சுட்டிக்காட்டியியுள்ளார். ஆகையால் இந்த முறை பட்ஜெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது.

1 /10

புதுப்பிப்புகளின்படி, COVID-19 தொற்றுநோயை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், முன்னர் அறிவிக்கப்பட்ட சலுகைகளை யூனியன் பட்ஜெட் 2020-21, மேலும் முன்னெடுத்துச் செல்லும். தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கான அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ .2.50 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் தினசரி செலவுகளுக்கான பண இருப்பு அதிகரிக்கும்.

2 /10

கொரோனா வைரஸ் தொற்று நீடிக்கும் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் இந்த புதிய இயல்பும் தொடரும் என்ற நிலை உள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகும் சில துறைகளில் இந்த முறை தொடர்க்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சகம் நிலையான விலக்கு அதாவது Standard Deduction Limit வரம்பை அதிகரிக்கக்கூடும். நிலையான விலக்கு உயர்வு என்பது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு நல்ல ஒரு நிவாரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

3 /10

Budget 2021: இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு மகிழ்ச்சியான பல செய்திகள் காத்திருக்கின்றன. விற்கப்படாத குடியிருப்பு பிரிவுகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் வரிவிலக்கு நிலையை இன்னும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க நரேந்திர மோடி அரசாங்கம் யோசித்து வருகிறது.

4 /10

பிரதமர் கிசான் யோஜனாவின் (PMKSYN) கீழ் கொடுக்கப்படும் கிசான் சம்மான் நிதியின் அளவை ரூ .6000 லிருந்து ரூ .10,000 ஆக அரசு உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிக்கையும் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையாக பார்க்கப்படுகிறது. அதில் அவர் இந்த முறை பட்ஜெட் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார். 2021 பட்ஜெட்டில், விவசாயிகள் தொடர்பான பிற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படலாம் என வட்டாரங்காள் தெரிவிக்கின்றன. கிராம அபிவிருத்தி, பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

5 /10

20 பொருட்களின் சுங்க மற்றும் இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின் படி, தளபாடங்கள் மூலப்பொருட்கள், செப்பு ஸ்கிராப், தொலைத் தொடர்பு உபகரணங்கள், ரசாயன மற்றும் ரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் தற்போதுள்ள சுங்க வரியில் இந்திய அரசு மாற்றங்களை அறிவிக்கலாம். பி.டி.ஐ அறிக்கையின்படி, 2021 பட்ஜெட்டில், சுமார் 20 பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படும். மெருகூட்டப்பட்ட வைரம், ரப்பர் பொருட்கள், தோலால் தயாரிக்கப்படும் பொருட்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை அவற்றில் சிலவாகும். இவற்றின் விலை அதிகரிக்கக்கூடும்: பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, குளிர்சாதன பெட்டிகள் (Fridge), சலவை இயந்திரங்கள் (Washing Machine) மற்றும் துணி உலர்த்திகள் (Cloth Drier) போன்ற சில பொருட்களுக்கான வரி அதிகரிக்கக்கூடும். ஆகையால் இவற்றின் சந்தை விலையும் உயரக்கூடும்.  

6 /10

இந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்ஃபோங்களுக்கான GST குறைக்கப்பட்டு அவற்றின் விலைகள் குறைக்கப்படும் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மொபைல் ஃபோன் துறைக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைப்பதற்கான கோரிக்கையை தொழில்துறை அமைப்பு இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) புதுப்பித்துள்ளது. "ஒவ்வொரு இந்தியரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் என்ற இலக்கை அடைவதற்கும், 80 பில்லியன் டாலர் உள்நாட்டு மொபைல் போன் சந்தை என்ற இலக்கை அடைவதற்கும், மொபைல் போன்களில் GST-ஐ 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க வேண்டியது அவசியம்" என்று ICEA தலைவர் பங்கஜ் மோஹிந்திரூ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

7 /10

பட்ஜெட் 2021-ல் மாணவர்களுக்கு பல நல்ல செய்திகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக உள்ளது. கல்வி கடன் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது என்று மாணவர்கள் கூறுகிறார்கள். எனவே, கல்வி கடன் விதிகளை எளிதாக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை உள்ளது. மேலும், கல்விக் கடனுக்கான வட்டி வீதத்தையும் குறைக்க வேண்டும் என மாணவர்கள் விரும்புகிறார்கள். இந்தியாவில், கார் கடன்கள் நிமிடங்களில் கிடைத்து விடுகின்றன, ஆனால், கல்வி கடன்களுக்கு பல முறை அலைய வேண்டியுள்ளது என்ற கருத்தும் நிதி அமைச்சரின் முன் வைக்கப்பட்டது. கல்வித் துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், நிதி அமைச்சரும் மாணவர்களுக்கு நல்ல செய்தியை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

8 /10

Startup-களுக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என சுயதொழில்முனைவோர் விரும்புகின்றனர். ஸ்டார்ட்அப்களால் முதலீட்டாளர்களை எளிதில் பெற முடிவதில்லை. அப்படியே கிடைத்தாலும், அவர்களின் வட்டி விகிதம் மிக அதிகமாக உள்ளது. எந்தவொரு நிறுவனத்தையும் தொடங்க பல வருடங்கள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் ஸ்டார்டப்களுக்கு விசேஷ தொகுப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆத்மநிர்பர் பாரத் பிரச்சாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் Startup-களுக்கான சிறப்பு நிவாரணத்தை நிதி அமைச்சர் அறிவிக்ககூடும் என தெரிகறது.  

9 /10

Union Budget 2021: கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தில் அதன் காரணமாக ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ​​அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு, சுகாதார முறைமையில் தனது கவனத்தை அதிகமாக செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை ஏப்ரல் 1 முதல் செயலாக்கத்தில் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த துறையில் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4 சதவீதமாக உயர்த்துவதே திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்திய சுகாதாரத் துறையில் மருத்துவ சாதன உற்பத்தியாளர்களின் தேவையை பெரிதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டிலேயே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க அரசாங்கத்தின் சார்பில் இந்த பட்ஜெட்டில் இத்துறைக்கு ஊக்கம் கிடைக்கக்கூடும். இதில், உபகரணங்கள் மீதான வரி நிவாரணம் மற்றும் எளிதான கடன் போன்ற தேவைகள் குறித்து ஒரு பெரிய அறிவிப்பு இருக்கக்கூடும். 

10 /10

பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட ஈக்விட்டி பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் விற்பனையிலிருந்து வரும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு ரூ .1 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்படுகின்றன. மேலும், ரூ .1 லட்சத்துக்கு மேல் உள்ள ஆதாயம், ஆதாயம் குறியீட்டு நன்மை இல்லாமல் 10% வரிக்கு உட்படுத்தப்படுகிறது. சில்லறை முதலீட்டாளர்களுக்கு விலக்கு வரம்பை ரூ .1 லட்சத்திலிருந்து ரூ .2 லட்சமாக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாற்றாக, வரி விகிதத்தை 5% ஆக குறைப்பதை பற்றியும் அரசாங்கம் சிந்திக்கக்கூடும். இது மூலதன சந்தைக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.