Virat Kohli தலைமையில் 2008-ல் இந்திய அணி U-19 World Cup வென்று சாதனை படைத்த நாள் இன்று

புதுடெல்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். அதே நேரத்தில், பேட்டிங்கிலும் அவருக்கு இணை யாரும் இல்லை. விராட் கோலியின் சாதனைகளுக்கு உலகமே சாட்சி. 

இவரது தலைமை பற்றி பலரால் பேசப்படுகிறது. விராட் கோலியின் இந்த வெற்றிக்கு பின்னால் 13 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கிடைத்த மற்றொரு வெற்றியும் அடித்தளமாக உள்ளது. 2008 ஆம் ஆண்டில் இந்த நாளில்தான், விராட் தலைமையில் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.  

1 /5

உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை விறுவிறுப்பான வகையில் 12 ரன்கள் (டி / எல்) வித்தியாசத்தில் தோற்கடித்தது. விராட் கோலி தலைமையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா வென்றது. முன்னதாக 2000 ஆம் ஆண்டில், முகமது கைஃப் தலைமையில், இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது.

2 /5

2008 இல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதியில், நியூசிலாந்தை இந்தியா எதிர்கொண்டது. கிவி அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். அந்த போட்டியில், இந்தியாவுக்கு 43 ஓவர்களில் 191 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 9 பந்துகள் மிச்சமிருந்த நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. இந்த போட்டியில் விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார்.

3 /5

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற அணியின் 5 வீரர்கள் இந்திய அணியின் ஒரு பகுதியாக மாறினர். விராட் கோலி தவிர, ரவீந்திர ஜடேஜா, சித்தார்த் கவுல், மணீஷ் பாண்டே, சௌரவ் திவாரி ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர். இன்று இந்திய அணியின் முக்கிய அங்கமாக ரவீந்திர ஜடேஜா உள்ளார்.

4 /5

இந்த போட்டியில், விராட் ஒரு அபாரமான கேப்டனாக இருந்ததோடு, அற்புதமாக பேட்டிங்கும் செய்தார். இப்போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி மூன்றாவது இடத்தில் இருந்தார். அவர் 6 போட்டிகளில் 235 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் இருந்து அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில் இருந்தார். அவர் போட்டிகளில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5 /5

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதம் அடித்த முதல் கேப்டன் கோலி ஆவார். கோலியின் தலைமையின் கீழ், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை வென்று டீம் இந்தியா வரலாற்றை உருவாக்கியது. 2015 ஆம் ஆண்டில், விராட் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2–1 என்ற கணக்கில் வென்றது. அதே நேரத்தில், 2018-19ல், தனது தலைமையின் கீழ், விராட் கோலி ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வாங்கிக்கொடுத்தார். 71 ஆண்டுகளில் முதல் முறையாக, ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.