2021 முதல் சந்திர கிரகணம், மே 26: இந்தியாவில் தெரியுமா? நேரம் என்ன? இந்த ராசியில் நேரடி தாக்கம்!!

கிரகணங்கள், வானியலாளர்கள், விஞ்ஞானிகள், ஜோதிடர்கள் என அனைவருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்வாக இருந்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்த மாதம் நிகழவுள்ளது. 

இந்த கிரகணம் எந்த நாளில் நிகழப்போகிறது, அது இந்தியாவில் காணப்படுமா இல்லையா, கிரகண காலம் என்ன என்பது போன்ற இந்த கிரகணத்தின் சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

1 /5

சந்திர கிரகணம் ஒரு வானியல் நிகழ்வாகும். விஞ்ஞானத்தின் படி, சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு நேர் கோட்டில் வரும்போது, ​​சந்திரன் பூமியின் பின்னால் அதன் நிழலில் சென்று விடுகிறது. இது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இது பௌர்ணமி அன்று நிகழ்கிறது. வானியல் நிகழ்வாக இருப்பதைத் தவிர, சந்திர கிரகணம் ஜோதிடத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.  

2 /5

இந்து பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட கணக்கீடுகளின்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வைகாசி மாதத்தின் பௌர்ணமி நாளான மே 26 அன்று நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் நிழல் சந்திர கிரகணமாக இருக்கும். சந்திர கிரகணம், மே 26 அன்று இந்திய நேரத்தின்படி, பகல் 2.17 மணிக்கு தொடங்கி மாலை 7.19 மணி வரை இருக்கும். 

3 /5

இந்திய நேரத்தின் படி, இந்த சந்திர கிரகணம் பகலில் நிகழும் என்பதால், இது இந்தியாவில் தெரியாது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் எங்கும் காணப்படாது. இந்தியாவில் கிரகணம் காணப்பதடாது என்பதால் வழக்கமான கிரகண சடங்குகளுக்கு தேவை இருக்காது என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.   

4 /5

மே 26 அன்று சந்திர கிரகணம் ஜப்பான், சிங்கப்பூர், பங்களாதேஷ், தென் கொரியா, பர்மா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல், ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் காணப்படும். 

5 /5

இந்து பஞ்சாங்கத்தின் படி, மே 26 அன்று நடக்கவிருக்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தின் தாக்கம் விருச்சிக ராசி மீது நேராக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் மீதான தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் கிரகணத்தின் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.  (குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தாது.)