PhonePe In Health Service: சுமார் ரூ. 1 கோடி வரையிலான சுகாதார காப்பீட்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது PhonePe நிறுவனம். இது தொடர்பாக, டிவிட்டரில் ஃபோன்பேபிரைவேட் லிமிடெட் செய்தி வெளியிட்டுள்ளது.
Exciting news! PhonePe launches India's 1st Health Insurance with monthly subscriptions.
— PhonePe (@PhonePe) July 18, 2023
Say goodbye to annual premiums and access affordable Health Insurance with flexible monthly plans conveniently through the app.
Click here to know more: https://t.co/qmtNCcTUMG
UPI மாதாந்திர கட்டண முறையின் அறிமுகமாகும் முதல் சுகாதார காப்பீட்டு என்பது ஃபோன்பேயின் புதிய தொழிலின் முக்கிய சிறப்பம்சமாகும்.
முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான காப்பீட்டை வழங்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது ஃபோன்பே
சுமார் ஒரு கோடி ரூபாய் வரையிலான கவரேஜுடன் வரும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறது ஃபோன்பே
சுகாதார காப்பீட்டை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், மாதாந்திர ப்ரீமியம் வசூலிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஃபோன்பே வழங்குகிறது
PhonePe இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் சர்வீசஸ், இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கும்.
மாதாந்திர ப்ரீமியம் செலுத்தும் முறை அல்லது ஆண்டுதோறும் ப்ரீமியம் செலுத்தும் முறையிலும் பாலிசி வாங்கலாம்
காப்பீட்டின் தொகையை விட 7 மடங்கு வரை போனஸ் கவரேஜ் போன்ற புதுமையான அம்சங்கள், ஃபோன்பே வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் உள்ளது