50 வயதை கடந்தோர் இந்த பழத்தையெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க!

மனிதர்கள் அனைவரும் தினசரி உணவில் ஏதேனும் ஒரு பழத்தை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

1 /4

பொதுவாக பெர்ரி வகை பழங்களில் அதிக நார்ச்சத்தும், குறைந்தளவு சர்க்கரையும் உள்ளது.  அந்த வகையில் ராஸ்பெர்ரியில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் மூலக்கூறுகள் உள்ளது, மேலும் இது ஜீரண சக்திக்கும் உதவுகிறது.  

2 /4

பச்சை ஆப்பிள் வயதானவர்களுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது.  இது ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்தவும், உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கவும் பயன்படுகிறது.  

3 /4

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழங்கள் அனைத்து வயதினருக்கும் ஏற்றது, இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்திற்கும் நன்மையளிக்கிறது.  

4 /4

தர்பூசணி பழங்களில் அதிக நீர்சத்து நிரம்பியுள்ளது, இது உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.  இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு, சருமத்தையும் நன்கு ஹைட்ரேட்டாக வைத்திருக்கிறது.