Protein Rich Foods: ஒருபோதும் தவிர்க்கக்கூடாத புரத உணவுகள் இவை

ஆரோக்கியத்திற்கு அடிப்படையான தசை மற்றும் எலும்புகளை உருவாக்குவது புரதச் சத்து. ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களை உருவாக்குதல் உட்பட ஆரோக்கியத்தின் பல கூறுகளுக்கு புரதம் இன்றியமையாதது. புரதம் அதிகமாக இருக்கும் உணவுகளின் பட்டியல் இது...

1 /6

புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது நமது உடல் செல்களின் வளர்ச்சி மற்றும் பழுதுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கிறது, நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமற்ற பசியை நிர்வகிக்க உதவுகிறது. 

2 /6

வேர்க்கடலை, பருப்பு வகையை சேர்ந்ததாக இருந்தாலும், அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. வேர்க்கடலையில் 20 அமினோ அமிலங்களும் போதுமான விகிதத்தில் உள்ளன,  

3 /6

பாசிப்பயறு உலகின் சிறந்த தாவர அடிப்படையிலான புரத ஆதாரங்களில் ஒன்றாகும். அத்தியாவசிய அமினோ அமிலங்களான ஃபைனிலாலனைன், லியூசின், ஐசோலூசின், வாலின், லைசின், அர்ஜினைன் மற்றும் பல, பச்சைப்பயறில் நிறைந்துள்ளது  

4 /6

கடலைப்பருப்பில் புரதம் அதிகமாக உள்ளது, இது சைவ உணவுகளில் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதிலுள்ள ராசரி புரத உள்ளடக்கம் கிட்டத்தட்ட 18% ஆகும், 

5 /6

தினசரி புரத உட்கொள்ளலை அதிகரிக்க, பனீர் சிறந்த முறையில் உதவுகிறது. பனீர் விலங்கு புரதத்தின் வளமான மூலமாகும், ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைக்கிறது மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு விலங்கு புரதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

6 /6

குறிப்பாக மெலிந்த புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களுக்கான ஆற்றல் மையமாக இருக்கிறது முட்டைகள். தினசரி உணவில் சேர்க்கக்கூடிய புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது முட்டை...