வக்ரமடையும் குரு! செப்டம்பர் முதல் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம் தான்!

மீனத்தில் வக்ரமடையும் குரு: மகிழ்ச்சி, நல்வாழ்க்கை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவரான குருவின் ஸ்தானத்தில் மாற்றம், அனைவரின் அதிர்ஷ்டம், திருமண மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் போன்றவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

ஜோதிடத்தில், குருவுக்கு தேவகுரு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தேவகுரு பிருஹஸ்பதி ஒரு வருடத்தில் ராசியை மாற்றுகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான், இந்த ஆண்டு தனது சொந்த ராசியான மீனத்தில் நுழைந்துள்ளார். 22 ஏப்ரல் 2023 குரு அடுத்த ஆண்டு மே 2024 வரை மீன ராசியில் இருப்பார். இதற்கிடையில் செப்டம்பர் மாதத்தில் குரு வக்ர நிலையை அடையப் போகிறார். 

1 /6

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது பெரியோர் வாக்கு. எந்த வகையான தோஷம் இருந்தாலும் குரு ஒரு பார்வை பார்த்தால் அனைத்து தோஷங்களும்  விலகி விடும். குருவின் பார்வை பட்டாலே நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் தான் மற்ற தெய்வங்களை எப்படி வழிபட்டாலும், குரு பகவானை மட்டும் நேருக்கு நேராக நின்று வணங்க வேண்டும் என்கிறார்கள்.

2 /6

குரு பகவான் 22 ஏப்ரல் 2023 அன்று மீனத்தில் சஞ்சரித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு மே 2024 வரை மீன ராசியில் இருப்பார். இதற்கிடையில் குருவின் சஞ்சாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். செப்டம்பர் மாதத்தில் குரு  வக்ர நிலையை அடைவது அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மிகவும் நல்ல பலனைத் தரும். வக்கிர குரு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன் தரப்போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

3 /6

 மேஷ ராசிக்காரர்களுக்கு வக்ரமடையும் குரு செல்வத்தை தருவார். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். உங்கள் தடைபட்ட வேலைகள் விரைவில் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கான தேடல் முடியும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணத்தைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

4 /6

மிதுன ராசிக்காரர்களுக்கு வக்ரமடையும் குருவினால் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் நிறைய பயனடைவீர்கள். திடீரென்று எங்கிருந்தோ பணம் கிடைக்கும், இது பல பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். சில ஆடம்பரப் பொருட்களையும் வாங்கலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும். நீங்கள் புதிய சொத்து வாங்கலாம்.

5 /6

கடக ராசிக்காரர்களுக்கு, வக்ரமடையும் குரு ஒரு வரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு-உயர்வு பெறலாம். தொழில் விரிவாக்கம் ஏற்படும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மரியாதை அதிகரிக்கும். தடைப்பட்ட பணம் கிடைத்து மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது