வக்ர நிலையில் சனி: 3 ராசிகளுக்கு நவம்பர் 3 வரை பணக்கார யோகம்... லாபம், ஏற்றம் கைகூடும்

Shani Vakri 2023, Impact on Zodiac Signs: வேத ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் அவர்.

ஒருவரது ஜாதகத்தில் சனியின் நிலை நன்றாக இல்லையெனில் அவர் பல தொல்லைகளை அணுபவிக்க நேரிடுகின்றது. சனியின் அசுப பலன்களை சமாளிக்க பல நல்ல செயல்களை செய்வது நல்லது. சனி பகவான் தற்போது வக்ர நிலையில் உள்ளார். இதன் காரணமாக அற்புதமான பல நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள சில ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

சனி வக்ர பெயர்ச்சி: 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். சனி பகவான் 3 நவம்பர் 2023 வரை வக்ர நிலையில் இருப்பார். 

2 /8

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், ஒவ்வொரு ரசியிலும் அவர் அதிக காலத்துக்கு இருக்கிறார். ஆகையால் மற்ற கிரகங்களை விட அவரால் உண்டாகும் விளைவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும்.

3 /8

சனியின் வக்ர இயக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனினும், சனியின் இந்த இயகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

4 /8

ரிஷபம்: சனியின் வக்ர இயக்கம் ரிஷப ராசியினருக்கு புதிய சகாப்தத்தை துவக்கும். நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு முன்னேறுவீர்கள். பெரிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெரிய பதவியும் சம்பளமும் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நம்பிக்கை அதிகரிக்கும். 

5 /8

துலாம்: வக்ர சனி துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். சில நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். எதிர்பாராத லாபம் உண்டாகும். 

6 /8

மகரம்: சனியின் வக்ர இயக்கம் மகர ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். இதன் காரணமாக நீங்கள் மிகுந்த நிம்மதி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.   

7 /8

சனி பகவானை மகிழ்விக்க: உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவும் நல்ல எண்ணம் கொண்டவர்களை சனி பகவான் சோதிப்பதில்லை. மனிதர்களை பாதிக்கும் ஏழரை சனி, சனி தசை ஆகியவற்றின் தாக்கத்தில் உள்ளவர்கள் அவர் அருளை பெற, கோளறு பதிக, சனி சாலிசா ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லலாம். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.