Latest News For Pensioners: ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டம் குறித்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Makkal Kurai Theerkkum Naal Latest Updates: அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுக்குறித்து பார்ப்போம்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு!
இன்று (டிசம்பர் 13) ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு வந்து எந்த மாவட்டத்தைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் பொருந்தும், என்ன வகையான மாற்றம் என்பது குறித்து விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
நாடு முழுவதும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறும் வகையில், அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளும் சலுகை வழங்கும் குறித்தும் தகவல்கள் அரசு தரப்பில் வெளியிடப்படும்.
அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் அவர்களது குறைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஓய்வூதிர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக மனுவாக தெரிவிக்க வேண்டும். அதற்கென்றும் குறிப்பிட்ட காலவகாசம் வழங்கப்படும்.
அந்த குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது முறையீடுகளை கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டமானது டிசம்பர் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில நிர்வாக காரணத்தினால் இன்று (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அதாவது இந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பக்கூடிய ஓய்வூதியதாரர்கள் இருந்து தங்களுடைய முறையீடு மனுக்களை ஏற்கனவே அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.