நாம் பகல் நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகளையெல்லாம் இரவு நேரத்தில் சாப்பிடுவது உடல்நலத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரவு நேரத்தில் பழங்கள் அல்லது காய்கறிகள் நிறைந்த சாலட் சாப்பிடவே கூடாது, இது உங்களுக்கு அஜீரண கோளாறை ஏற்படுத்தும்.
பால் பொருட்களில் ஒன்றான தயிரை இரவு நேரத்தில் சாப்பிடவே கூடாது.
குளிர்ந்த உணவு வகைகளையோ அல்லது குளிர் பானங்களையோ இரவு நேரத்தில் ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
கேஃபைன் நிறைந்த தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை அருந்துவதால் உங்களது தூக்கம் பாதிப்பதோடு அஜீரண கோளாறு ஏற்படும்.