T20 World Cup: உலக கோப்பையில் வாண வேடிக்கை காட்டப்போகும் டாப் 5 பேட்ஸ்மேன்கள்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் அதிரடி மூலம் வாண வேடிக்கை காட்டப்போகும் டாப் 5 பேட்ஸ்மேன்கள். 

 

1 /5

சூர்யகுமார் யாதவ்: இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். அண்மையில் அவர் விளையாடிய அனைத்து தொடர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலக கோப்பையிலும் அதே ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 /5

டிம் டேவிட், ஆஸ்திரேலியா; ஆஸ்திரேலியாவின் டி20 ஸ்பெஷலிஸ்ட் டிம் டேவிட். இவர் அந்த அணியின் மேட்ச் வின்னராக இருப்பார் என கருதப்படுகிறது. 160 ஸ்டைக்ரேட் வைத்திருக்கிறார். வாண வேடிக்கைகள் நிச்சயம் இவரது பேட்டில் இருந்து எதிர்பார்க்கலாம்.  

3 /5

ஜிம்மி நீஷம், நியூசிலாந்து; நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், அதிரடியாக விளையாடக்கூடியவர். இவரின் ஆட்டம் குறைத்து மதிப்பிடப்படுகிறது அல்லது அதிகம் கவனம் பெறவில்லை என்றே கூறலாம். ஆனால் இவர் களத்தில் இருக்கும் வரை எதிரணிக்கு ஆபத்து தான்.

4 /5

ஃபின் ஆலன், நியூசிலாந்து; சர்வதேச போட்டிகளில் அதிகம் பரீட்சயம் இல்லாத பெயர் என்றாலும், அதிரடியில் வெளுத்து வாங்க கூடியவர். இவர் நிலைத்து நின்றுவிட்டால், நியூசிலாந்து அணியின் வெற்றி உறுதி என்றே கூறலாம். பின் ஆலத்தின் அதிரடியை காண ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர். 

5 /5

எவின் லூயிஸ், வெஸ்ட் இண்டீஸ்; பல அதிரடி மன்னர்கள் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஒரு பெயரை குறிப்பிடுவது கடினம் என்றாலும், 20 ஓவர் உலக கோப்பை அணியில் இருக்கும் எவின் லூயிஸை குறிப்பிட்டு சொல்லலாம். சூழலுக்கு ஏற்றார்போல் ஆடக்கூடியவர். டாப் ஆர்டரில் இவர் இருந்தால் பந்துவீச்சாளர்கள் நிலை கவலைக்குரியதாக அமைந்துவிடும்.