NEEM LEAVES: வேப்பமரத்தின் இலைகள், பட்டை மற்றும் பழங்கள் போன்றவை பல நோய்களைக் குணப்படுத்தும். நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு, வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த சஞ்சீவனி என்றால் மிகையாகாது.
ஃபிளாவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டுகள், கிளைகோசைடுகள் எனப்படும் சிறப்பு இரசாயனங்கள் வேப்பிலைகளில் காணப்படுகின்றன, இவை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
மிகவும் கசப்பான சுவை கொண்ட வேப்பிலை சாறு, நீரிழிவு நோய்க்கும் வேம்பாக கசக்கிறது. வேப்பிலை சாற்றை உட்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் மெல்ல மெல்ல பழகிக்கொண்டால், அது நீரிழிவு நோயை வேரறுக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 முதல் 3 இலைகளைச் சேர்த்து அரைத்து, அதிலிருந்து கிடைக்கும் சாற்றை குடிக்கத் தொடங்கவும். படிப்படியாக இவற்றை அதிகரித்து, தினசரி 7 முதல் 8 இலைகள்க் என்ற அளவுக்கு கொண்டு வரவேண்டும்.
தினமும் வேப்பிலைச் சாற்றை தொடர்ந்து குடித்துவந்தால், நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவதுடன், வேறு பல நோய்களும் சீராகும், சரும அழகும் தெளிவாக மெருகேறும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிககும் பண்புகள் வேப்பிலையில் உள்ளன. சில வேப்ப இலைகளை நசுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மஞ்சளுடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து, அந்த பேஸ்டை சருமத்தில் பூசினால், அரிக்கும் தோலழற்சி, வளைய புழுக்கள் மற்றும் சில சரும பாதிப்புகள் சரியாகும்.
ஒருசில வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, பிறகு ஆறிய நீரைக் கொண்டு கண்களைக் கழுவவும். இது கண்களில் ஏற்படும் எரிச்சல், சோர்வு ஆகியவற்றிற்கு உதவும்.
ஒரு கொத்து வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தல், அந்த நீர் பச்சை நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும், அதை ஆறவைத்துக் கொள்ளவும். ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிய பிறகு, வேப்பிலை நீரால் தலைமுடியை அலசவும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், தலையில் உள்ள பொடுகுகள் அனைத்தும் காணமல் போய்விடும்