Online Dating Scam: டேட்டிங் ஆப் எனப்படும் செயலிகள் மூலமாக பெண்களுடன் உல்லாசமாக பொழுதைக் கழிப்பவர்களை குறி வைத்து நடத்தப்படும் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!
மும்பையில் நடைபெறும் டேட்டிங் ஆப் செயலி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது, நைட் கிளப்பில் சிறிது நேரம் சந்தித்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்யும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
டேட்டிங் ஆப் மோசடி வெளிச்சத்திற்கு வந்து, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மோசடியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து ஆண்கள் மோசடி செய்யப்படுகின்றனர்.
டிண்டர், பம்பிள், ஹாப்ன் மற்றும் குவாக்குவாக் போன்ற பிரபலமான டேட்டிங் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி நைட் கிளப்கள் மற்றும் ஹோட்டல்கள் மோசடி செய்வதாகக் கூறப்படுகிறது....
சமூக ஊடக தளத்தில் தீபிகா நாராயண் பரத்வாஜ் என்ற பயனர், இந்த மோசடியை பகிரங்கப்படுத்தியுள்ளர்.
டேட்டிங் ஆப்ஸில் அறிமுகமாகும் ஆண்களும், பெண்களும் விலையுயர்ந்த கிளப்புகளில் சந்திப்பதை பரிந்துரைக்கும் ஏப்ஸ்களை பயன்படுத்தி மோசடி நடக்கிறது
அதில் சில பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள், ஆனால் அவை பெரும்பாலும் மெனுவில் இருப்பதில்லை
ஆர்டர் செய்துவிட்டு அவர்கள் சந்திக்கும் ஆண்களை விட்டு நழுவிவிடுவார்கள். ஏப் மூலம் அறிமுகமான பெண்ண சந்தித்த ஆண்கள் செலுத்த வேண்டியத் தொகையைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது
இது பற்றி எதிர்த்து கேள்வி கேட்டாலும், ஏன் இவ்வளவு விலை என்று கேட்டாலும் நைட் கிளப் ஊழியர்கள் மிரட்டியதாக ஆண்கள் குற்றம் சாட்டுகின்றனர்
இந்த மோசடி பெரிய அளவில் நடக்கின்றன. ஒரே கிளப்பில் தினமும் குறைந்தது 10 ஆண்களாவது மோசடிக்கு பலியாகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பில்லில் 15-20% கமிஷன் கொடுத்து இந்த மோசடி நடைபெறுவதாக கூறப்படுகிறது