Jhanmastami 2024: குட்டிக் கண்ணனின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் போல அவரின் அண்ணன் பலராமரின் பிறந்தநாளும் இந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு முதல் நாள் பலராம அஷ்டமி கொண்டாடப்படுகிறது
கடவுள் கண்ணனின் அண்ணன், விஷ்ணுவின் அவதாரம் பகவான் ஸ்ரீ பலராமர் பிறந்த நாள் கொண்டாட்டம்...
பூமியின் பாரத்தை குறைக்க கடவுள் விஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணாவதாரத்தில், கண்ணனின் அண்ணன் பலராமர் கண்ணனுக்கு முன்பே பிறந்தவர்
கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் நாள் பலராமர் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது
கண்ணனின் கையில் புல்லாங்குழல் இருந்தால், அண்ணனின் கையில் இருப்பதோ ஏர்கலப்பை
கிருஷ்ணரின் தந்தை வசுதேவருக்கும் அவரது மனைவி ரோகினிதேவிக்கும் பிறந்தவர் பகவான் ஸ்ரீ பலராமர்
கிருஷ்ண ஜெயந்தியை போலவே பலராமரின் பிறந்தநாளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பலராமர் ஆதி சேசனின் அம்சம் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. . பாற்கடலில் இறைவன் மகாவிஷ்ணுவை சுமந்து கொண்டு இருக்கும் ஆதிசேஷனே கிருஷ்ண அவதாரத்தின் போது கண்ணனின் அண்ணனாக பலராமராக அவதரித்தார்
தேவகியின் வயிற்றில் கருவாகி மாயையினால் ரோகிணியின் வயிற்றில் வளர்ந்து அவதரித்தவர் பலராமர். ஆதிசேஷனின் அம்சமாக கருதப்படும் பலராமர் கண்ணனுக்கு சேவை செய்வதற்காகவே கிருஷ்ணருக்கு அண்ணனாகப் பிறந்தார் என்பது நம்பிக்கை
தங்கையின் வயிற்றில் உதிக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு ஆபத்து என்பதால், அரசன் கம்சன் தங்கை தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து வைத்தான். அவர்களுக்கு பிறந்த ஆறு குழந்தைகளை கொன்றான்.
தேவகி ஏழாவதாக கருவுற்றபோது, மகாவிஷ்ணு தனது மாயை மூலம் கருவை தேவகி வயிற்றில் இருந்து வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணி வயிற்றுக்கு மாற்றினார். ரோகிணியை பாதுகாப்பாக ஆயர்பாடியில் நந்தகோபரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கு ரோகிணியின் மகனாக பிறந்து, தம்பி கண்ணனுக்காக காத்துக் கொண்டிருந்தார் பலராமர். அந்த அண்ணனின் பிறந்தநாள், ஜென்மாஷ்டமிக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது