உடல் பருமன் குறைய... சுவையான ‘சில’ இரவு உணவு ரெஸிபிகள்!

Dinner Recipies For Weight Loss: உடல் பருமனையும் தொப்பையையும் குறைக்க இரவு உணவை தவிர்ப்பது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதற்கு பதிலாக உடல் பருமனை குறைக்க உதவும் சில உணவுகளை டயட்டில் சேர்ப்பதால், உடல் எடை குறைவதோடு, உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

 

உடல் எடையை குறைப்பதில், டயட் மற்றும் உடற்பயிற்சி இரண்டுமே முக்கியம்.  உடல் எடையைக் குறைக்க பலர் இரவு உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால், பட்டினி கிடப்பது நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

1 /7

டயட் உணவுகள்: உடல் எடையை குறைப்பதற்காக பலர், இரவில் சாப்பிடாமல் பட்டினி கிடந்து, இரவு உனவை தவிர்க்கிறார்கள், பட்டினியால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இழப்பது மட்டுமல்லாமல், விட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பற்றாக்குறையையும் சந்திக்க நேரிடும். 

2 /7

இரவு உணவு: மதிய உணவை விட இரவு உணவு லைட்டான எளிதில் ஜீரணிக்க கூடிய உணவாக இருக்க வேண்டும். உணவை தவிர்ப்பதற்கு பதிலாக, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் ஆரோக்கியமான 4 வகையான டயட் உணவுகள் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

3 /7

சாமை அல்லது குதிரைவாலி  ஆகிய இரண்டுமே எடையைக் குறைக்கவும் உதவும் சிறுதானியங்கள். அரிசிக்கு பதிலாக குதிரைவாலி அல்லது சாமையை பயன்படுத்தி பாசிபருப்பை  சேர்த்து செய்யும்  பொங்கல் சூப்பர் வெயிட் லாஸ் உணவு. குளூட்டன் இல்லாத இவை நீரிழிவு நோயாளிகளுக்கும் வரப்பிரசாதம்.

4 /7

குயினோவா உப்புமா: புரதம் நிறைந்த குயினோவா என்பது சிறுதானியங்களான சாமை, தினை,  வரகு, குதிரைவாலி ஆகிய தானியங்களைப் போன்றது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி,முட்டைக்கோஸ் மற்றும் உங்களுக்கு பிடித்த சில காய்கறிகள் சேர்த்து  ரவை உப்புமாவைப் போல்  தயாரிக்கப்படும் இந்த உப்புமா டின்னருக்கான சூப்பர் உணவு.

5 /7

பருப்பு சூப்: இரவில் பருப்பு சூப் குடிப்பது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. காய்கறிகள் சேர்த்து செய்யும் பருப்பு சூப் இரவுக்கான முழுமையான உணவாக இருக்கும்.

6 /7

பிரைடு ரைஸ்:  ஃபிரைடு ரைஸ் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும், அதில் உங்களுக்கு பிடித்த காய்கறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெறலாம். அதில் உங்களுக்கு பிடித்த பீன்ஸ் , கேரட், கோஸ், தக்காளி வெங்காயம்  போன்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். 

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது