முடிக்கு மருதாணி பயன்படுத்துவது இயற்கையான முறை என்றாலும், ரசாயணம் கலந்த மருதாணியை பயன்படுத்தினால் முடி சீக்கிரம் உதிர அதிக வாய்ப்புள்ளது.
தலைமுடி வெள்ளையாக இருக்கும் பட்சத்தில் சிலர் மருதாணியை தடவும் பழக்கம் வைத்துள்ளனர். இவை முடியின் நிறத்தை மாற்றி இயற்கையான வண்ணம் கொடுக்கிறது.
ஆனால் தற்போது பலரும் சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த மருதாணி பவுடரை வாங்கி பயன்படுத்துகின்றனர். இவை முடிக்கு பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த மருதாணியை அடிக்கடி பயன்படுத்தினால் முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றி வறட்சி மற்றும் உடையக்கூடிய தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மருதாணி முடியின் அமைப்பை மாற்றும், இதனை அடிக்கடி பயன்படுத்தினால் முடி கரடுமுரடானதாகவும், உறுத்தலாகவும் இருக்கும். மேலும் ஒருசிலருக்கு மருதாணியை முடிக்கு தடவினால் முடி ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்துடன் இருக்கும்.
மருதாணியை அடிக்கடி முடிக்கு பயன்படுத்தினால் முடியின் இழைகள் வலுவிழந்து எளிதில் உடையக்கூடிய மாறும். சிலருக்கு மருதாணியால் ஒவ்வாமை அல்லது உணர்திறன் ஏற்படலாம். இதன் காரணமாக தலையில் அரிப்பு அல்லது தோல் அழற்சி ஏற்படலாம்.
மருதாணியைப் பயன்படுத்தினால் உங்கள் கைகளும் சிவப்பாக மாறும். ஒருசிலருக்கு இவை பிடிக்காமல் போகலாம். மருதாணி சீரான தோற்றத்தை அடைவதை கடினமாக்குகிறது.