மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!

மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ள சூழலில் எம்.பி.களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம். 

  • Jun 05, 2024, 21:42 PM IST

மொத்தம் நாடு முழுவதும் 543 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன. 

 

 

1 /8

மக்களவை உறுப்பினர்கள் மாத சம்பளமாக ரூ.1 லட்சம் பெறுவார்கள். கூடுதலாக, அவர்களின் சம்பளம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அதிகரிக்கும். அடிப்படை ஊதியம் உயராமல் அவர்களின் கொடுப்பனவுகள் (Allowances) உயரும்  

2 /8

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம், 2010இன் படி, அடிப்படை ஊதியம் என்பது ரூ.50 ஆயிரமாக நீடிக்கும்.   

3 /8

மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும்பட்சத்தில் உறுப்பினர்களுக்கு தினமும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையாக கொடுக்கப்படும்.     

4 /8

உறுப்பினர்கள் சாலை மார்க்கமாக பயணிக்கும்பட்சத்தில் ஒரு கிலோ மீட்டர் 16 ரூபாய் என்ற ரீதியில் அவர்களுக்கு பயணப்படி வழங்கப்டுகிறது.

5 /8

தொகுதி சார்ந்த நிதி ஒதுக்கீடாக மாதம் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு அலுவலக செலவாக மாதம் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. . 

6 /8

இதில் பேப்பர், பேனா போன்ற ஸ்டேஷ்னரி செலவுகளுக்கும், தபால் செலவுகளுக்கும் 15 ஆயிரம் இதில் ஒதுக்கப்படும். இந்த கொடுப்பனவை அலுவலக உதவியாளர்களின் ஊதியத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.  

7 /8

உறுப்பினர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ சேவையைப் பெற ஒவ்வொரு மாதமும், 500 ரூபாய் பெறுவார்கள்.  

8 /8

கூட்டங்களுக்குச் செல்வது உட்பட தங்கள் தொகுதிகளை பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் செலவுகளை விண்ணப்பித்து அதனை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினர்கள் தங்களுடைய முழு பதவிக்காலத்திலும் வாடகையில்லா வீட்டு வசதியைப் பெறுவார்கள்