டிமென்ஷியா என்பது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு வகையான அறிவாற்றல் குறைபாடு ஆகும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இந்த மனநல நிலையை எவ்வாறு நிர்வகிக்க உதவும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்...
டிமென்ஷியா என்பது ஒரு நபரின் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் பகுத்தறிவு போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கும் நிலை.
சில டிமென்ஷியா நோயாளிகள் தங்கள் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள், நினைவாற்றல் இழப்பபை டிமென்ஷியா என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அதன் அறிகுறிகளில் ஒன்றாகும்.
அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளையே பாதிக்கும் நோய் டிமென்ஷியா
அத்தியாவசிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது, குடல் இயக்கத்தை பராமரிக்க உதவுகிறது, கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, எடை இழப்புக்கு உதவுகிறது, மேலும் நீண்ட காலம் வாழ உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டிமென்ஷியாவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
ஊட்டச்சத்து நரம்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மூளையின் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து ஒரு முக்கிய மூலப்பொருள் என்று கண்டறிந்துள்ளது. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில், நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்பவர்கள் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை குறைக்கலாம் என்று தெரியவந்துள்ளது.