பிக்பாஸ் 8: 2வதாக எவிக்ட் ஆகும் போட்டியாளர் யார்? டேஞ்சர் லிஸ்டில் ‘இவர்’!

Bigg Boss 8 Tamil Second Eviction : சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பிக்பாஸ் 8 போட்டியில், கவனிக்கத்தக்க போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இதில், யார் இரண்டாவதாக எவிக்ட் ஆக உள்ளார்கள் தெரியுமா? 

Bigg Boss 8 Tamil Second Eviction : இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் போட்டி, மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் ஈர்த்து வருகிறது. இந்த சீசனை, புது தொகுப்பாளர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் பல கவனம் ஈர்க்கும் போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, முதல் எவிக்‌ஷன் நடந்தது. இதில், சாச்சனா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இரண்டாவதாக வெளியேறப்போகும் நபர் குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. 

1 /8

பிக்பாஸ் 8 இல்லத்தில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார் நடிகை சாச்சனா. இவர், மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார். இவர் வெளியேறியது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய டிவிஸ்டாக அமைந்தது. 

2 /8

பிக்பாஸில், கவனம் ஈர்க்கும் போட்டியாளராக இருக்கிறார் முத்துக்குமரன். தொகுப்பாளரான இவர், விஜய் தொலைக்காட்சியிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 

3 /8

நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன், பிக்பாஸிற்குள் நுழைந்தவுடன் தனது வாய்ஸிற்காக பிக்பாஸ் இல்லத்தினரால் கேலிக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து, இவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமானது. 

4 /8

பொன்னி சீரியல் மூலம் பிரபலமான தர்ஷிகா, பிக்பாஸில் நுழைந்தவுடன் பிறரை காலி செய்யும் அளவிற்கு விளையாடி வருவதாக கூறப்படுகிறது. இவர், இந்த வார கேப்டன் ஆனதால் இவரை யாராலும் நாமினேட் செய்ய முடியவில்லை. 

5 /8

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான ஜாக்குலின், பிக்பாஸில் கவனம் ஈர்க்கும் போட்டியாளராக இருக்கிரார். இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாக இருக்கிறது. 

6 /8

இந்த முறை பிக்பாஸ் இல்லம் Boys vs Girls என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் சீரியஸாக திட்டமிட்டு விளையாடு, ஆண்கள் அனைவரும் ஜாலியாக விளையாடி வருகின்றனர். 

7 /8

முதலாவதாக வெளியேறிய சாச்சனாவை அடுத்து, இரண்டாவதாக வெளியேற இருக்கும் போட்டியாளர் யார் என்பது குறித்து நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். 

8 /8

திரைப்பட தயாரிப்பாளரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகருமான ரவீந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் இந்த இல்லத்தில் இருந்து வெளியேற்றப்படலாம் என சிலர் கணித்திருக்கின்றனர். இவர் உடல் நலம் பெற்று விளையாட்டை தொடர்ந்தால், அதிகமாக நாமினேட் செய்யப்பட்டிருக்கும் போட்டியாளர்களில், யார் குறைவான வாக்கை பெற்றுள்ளார்களோ அவர்கள் வெளியேறலாம்.