இரவு நேரத்தில் லேட்டாக சாப்பிடும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக 4 வியாதிகள் வருவதை தவிர்க்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்
இரவு உணவை மிகவும் தாமதமாக சாப்பிடும்போது நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் வருகையை தவிர்க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்
நமது உடலில் சிர்கேடியன் ரிதம் எனப்படும் கடிகாரம் 365 நாட்களும் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் போன்று செயல்படும்.
இவை தான் நாம் எப்போது சாப்பிட வேண்டும், எந்த நேரம் சாப்பிட்டால் சௌகரியமாக இருப்பீர்கள் என்பதை நமக்கு உணர்த்தக்கூடும்.
இந்த அடிப்படையில் தான் நமது உடல் செய்கையில் அனைத்தும் அடங்கும். ஒருவேளை இவற்றிற்கு எதிராக மாறும் போது தான் உடல் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தான் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக கட்டாயம் சாப்பிட வேண்டும்.
குறிப்பாக இரவு 6 மணி முதல் 7.30 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். ஏனென்றால் நாம் சாப்பிக்கூடிய உணவுகள் வயிற்றில் இருந்து சிறு குடல் செல்வதற்கு 3 மணி நேரம் எடுக்கும். இந்த சூழலில் தாமதாக நாம் சாப்பிடும் போது, செரிமானம் சீராக நடைபெறாது.
மேலும் சாப்பிடக்கூடிய உணவ ஆற்றலா மாற்றக்கூடிய மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம் சீராக இல்லாமல் இருப்பதால் உடல் சோர்வுடனும் இருக்கும். இந்த பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும் என்றால்,சாப்பிட்டவுன் மெதுவாக நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடவுடன் தூங்கும் போது உடலில் இன்சுலின் அதிகளவில் சுரக்காது. சாப்பிக்கூடிய உணவுகளும் குளுக்கோஸாக மாறக்கூடும் என்பதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகளவில் இருக்கும். எனவே தான் தாமதாக இரவு உணவுகளை சாப்பிடக்கூடாது.
இரவு சாப்பிட்டவுடன் தூங்கும் போது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகளவில் சேரக்கூடும். மேலும் சாப்பிட்டவுன் உடலில் குளுக்கோஸ் அளவு அதிகமாகி மெலடோனின் எனப்படும் ஹார்மோன் கொழுப்பாக மாறக்கூடும். இதனால் உடல் பருமன் பிரச்சனையை நாம் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நமது உடலில் நமக்குத் தெரியாமலேயே பல உடல் நல பாதிப்புகள் உள்ளது. இந்த சூழலில் நாம் இரவு தொடர்ச்சியாக தாமதமாக சாப்பிடுவதால் இரத்தக்குழாயில் உட்காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இதயத்திற்கு இரத்தத்தை சீராக எடுத்துச் செல்லக்கூடிய இரத்த குழாய்களில் பாதிப்புகள் ஏற்படும் போது பல நேரங்களில் மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.மேலும் இரவு தாமதமாக சாப்பிடும் போது வயிற்றிற்குள்ளேயே உணவுகள் அதிகளவில் சேரக்கூடும். நாம் தூங்கலாம் என்று நினைத்தாலும் தூங்க முடியாமல் அவதிப்படக்கூடும்.