துலீப் டிராபி போட்டி அட்டவணை - எந்தெந்த அணிகள் எப்போது விளையாடும்? முழு விவரம்

Duleep Trophy 2024 schedule : இந்தியாவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் எந்தெந்த அணிகள் எப்போது விளையாடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Duleep Trophy 2024 schedule : இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், துலீப் டிராபி போட்டிகளுக்கான முழு அட்டவணையை பார்க்கலாம். 

 

1 /9

2024-25 ஆம் ஆண்டுக்கான சீனியர் பிளேயர்கள் விளையாடும் துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவில் இருக்கும் சீனியர் கிரிக்கெட் பிளேயர்கள் விளையாட இருக்கின்றனர்.

2 /9

ஏபிசிடி என நான்கு அணிகள் பிரிக்கப்பட்டு, தனித்தனியே மோத இருக்கின்றன. இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் பிளேயர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்த மாதங்களில் விளையாட இருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அணிகளைப் பொறுத்தவரை...

3 /9

இந்தியா ஏ: ஷுப்மான் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (WK), கே.எல். ராகுல், திலக் வர்மா, சிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத்.

4 /9

இந்தியா பி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என் ஜெகதீசன் (WK).

5 /9

இந்தியா சி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (WK), சூர்யகுமார் யாதவ், பி இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதார், கௌரவ் யாதவ், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே (WK), சந்தீப் வாரியர்.

6 /9

இந்தியா டி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (WK), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத் (WK), சௌரப் குமார்.

7 /9

துலீப் டிராபி போட்டி அட்டவணை செப்டம்பர் 5 - 8 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா A vs இந்தியா B அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. 

8 /9

இந்தியா C vs இந்தியா D அணிகள் செப்டம்பர் 5 - 8 வரை அனந்தபூர் ரூரல் டெவலப்மெண்ட் டிரஸ்ட் மைதானத்தில் மோதுகின்றன. செப்டம்பர் 12 - 15 ஆம் தேதியில் இந்தியா A vs இந்தியா D அணிகள் இதே மைதானத்தில் மோதுகின்றன. செப்டம்பர் 12 -15 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் இந்தியா B vs இந்தியா C அணிகள் அனந்தபூர் ACA ADCA மைதானத்தில் மோதுகின்றன. 

9 /9

செப்டம்பர் 19 - 22 நடைபெறும் போட்டியில் அனந்தப்பூர் ரூரல் டெவலப்மெண்ட் டிரஸ்ட் ஸ்டேடியத்தில் இந்தியா A vs இந்தியா C அணிகளும், இதே தேதியில் இந்தியா B vs இந்தியா D – ACA ADCA மைதானம், அனந்தபூரிலும் விளையாட இருக்கின்றன. துலீப் டிராபி போட்டிகளை ஜியோ சினிமா செயலி மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சிகளில் நேரலையாக கண்டு ரசிக்கலாம்.