Health Benefits Of Curry Leaves: உணவிற்கு மணத்தைக் கொடுக்கும் கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. அன்றாட உணவில், தவறாமல் இடம்பெறும் கறிவேப்பிலையை, அதன் அருமை தெரியாமல் தூக்கி எறிவது பலருக்கு வழக்கமாக உள்ளது.
கறிவேப்பிலையின் அருமை தெரியாமல், உணவில் தாளிதம் செய்யும்போது போடப்படும் கருவேப்பிலையை, அலட்சியமாக ஒதுக்கி விடுவதால், நமக்கு ஏற்படும் இழப்புகள் ஏராளம்.
மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலையை, தூக்கி எறியாமல் சாப்பிடுவதால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதோடு ,உங்களை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால், தினம் 7-8 கறிவேப்பிலையை கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
உடல் பருமன்: கறிவேப்பிலையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதால், உடலில் சேரும் நச்சுக்கள் நீக்கப்பட்டு, வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்படுகிறது இதனால் உடல் எடை குறையும்.
இரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவது நல்லது.
கண் பார்வை கூர்மை: கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்புரை நோய் ஏற்படுவதையும், கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்க: வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு எரிக்கப்பட்டு கட்டுக்குள் இருக்கும். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
சரும ஆரோக்கியம்: கறிவேப்பிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள பிரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் முதுமை அண்டாமல் இருக்கும். இதனால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகள் தீரும்.
கூந்தல் ஆரோக்கியம்: கறிவேப்பிலையில் ஆன்ட்டிஆக்சிடென்ட்களுடன், இரும்புச்சத்து, ஈசி ஆகியவை நிறைந்துள்ளதால், கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதோடு நரைமுடி, வழுக்கை முடி உதிர்தல் ஏற்படுவது பெரிதளவு தடுக்கப்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.