Indian Actress Who Became MP Including Kangana Ranaut : இந்திய நடிகைகள் பலர், சினிமாவில் இருந்து வந்து பின்னர் எம்.பிக்களாக மாறியிருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
Indian Actress Who Became MP Including Kangana Ranaut : நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்று முடிந்துள்ளதை தொடர்ந்து இதில் எம்பியாக நடிகை கங்கனா ரனாவத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதை தொடர்ந்து, எந்தெந்த இந்திய நடிகைகள் இதுவரை எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்.
திரையுலகிற்குள் நுழையும் நடிகைகள் பலர், சமூகத்தின் மீதுள்ள அக்க்கறையினாலும், வேறு சில காரணங்களினாலும் அரசியலுக்குள் நுழைகின்றனர். இந்திய திரையுலகை பொறுத்தவரை, நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதும் சாதிப்பதும் சகஜம். ஆனால், நடிகைகள் தன் பெயரை நிலைத்து நிற்க வைப்பது கடினமான காரியமாகும். அப்படி ஜெயித்து, எம்.பி ஆன நடிகைகளின் பட்டியல்.
ஸ்மிருதி ராணி: இந்திய சின்ன்னத்திரையுலகில் சீரியல் நடிகையாக இருந்தவர், ஸ்மிருதி ராணி. இவர், தற்போது மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார்.
கிரோன் கெர்: பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கியவர், கிரண் கெர். இவர், பாராளுமன்ற உறுப்பினராக மாரி, தனது தொகுதியின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக தீவிரமாக பணி புரிந்தார்.
ஜெய பிரதா: இந்தியாவின் பிரபல நடிகைகளுள் ஒருவர், ஜெய பிரதா. இவர், முதலில் தெலுங்கு தேசம் கட்சயில் உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு சமாஜ்வ்வாடி கட்சிக்கு தாவினார். பின்னர், அக்கட்சியின் சார்பாக ராஜ்ய சபா மற்றும் லோக் சபாவில் உறுப்பினராக இருந்தார்.
ஜெயலலிதா: தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, அரசியல் உலகிலும் ஒரு கலக்கு கலக்கியவர் ஜெயலலிதா. இவர் தமிழக மக்களால் மறக்க முடியாத முதலமைச்சராக இருக்கிறார். இந்திய அரசியல் தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர் இவர்.
ஜெயா பச்சன்: அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையுமானவர் ஜெயா பச்சன். இவர், சமாஜ்வாடி கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக மாறினார்.
ஹேமமாலினி: ஹேமமாலினி, இந்தியாவின் தொன்மையான நடிகைகளுள் ஒருவர். இவர், பாஜகவில் இணைந்த பிறகு பல்வேறு சமூக தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். எம்.பி ஆகவும் பதவி வகுத்திருக்கிறார்.
கங்கனா ரனாவத்: இந்திய திரையுலகில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக இருக்கிறார், கங்கனா ரனாவத். இவர், பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் தனது சொந்த ஊரான மண்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.