INDvsSA: ஒழுங்கா ஆடல.. ஆனாலும் ரோகித் சர்மா படைத்த சாதனை

கேப்டவுன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித்

 

1 /8

கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

2 /8

இப்போட்டியில், டாஸ் வென்ற முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் நட்சத்த்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.   

3 /8

இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது.  

4 /8

இந்த நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. சிறப்பாக ஆடிய மார்கிரம் சதம் விளாசி 106 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் யாரும் விளையாடததால் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால், இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.   

5 /8

பின்னர் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடிக்கப்பட, பர்கர் வீசிய 2வது ஓவரில் 15 ரன்கள் விளாசப்பட்டது.   

6 /8

இதன் மூலம் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றியை பெற முனைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகள் உட்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து கில் - ரோகித் சர்மா கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது.   

7 /8

8 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடக்க, ரபாடா வீசிய பந்தில் சுப்மன் கில் 10 ரன்கள் எடுத்திருந்த போது போல்டாகி வெளியேறினார். பின்னர் விராட் கோலியும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரோகித் சர்மா இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர்.   

8 /8

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதேபோல் 31 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி கேப் டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. கேப்டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை ரோகித் படைத்தார்.