Independence Day 2022: பல அரசு அல்லது பொது கட்டிடங்கள் அல்லது நினைவுச்சின்னங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டிடங்கள் மூவர்ணக் கொடியின் கருப்பொருளின்படி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள சட்டபேரவை. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். (புகைப்படம் – ANI)
இந்த புகைப்படம் ஜம்மு முபாரக் மண்டியின் பாரம்பரிய நினைவுச்சின்னமாகும்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. (புகைப்படம் – ANI)
தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் இரவில் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது. அதன் வளாகமும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. (புகைப்படம் – ANI)
நாட்டின் நாடாளுமன்ற வளாகமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது (புகைப்படம் – ANI)